Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - சங் - சங் 17

சங் 17:8-14

Help us?
Click on verse(s) to share them!
8கண்மணியைப்போல் என்னைக் காத்து.
9என்னை ஒடுக்குகிற துன்மார்க்கர்களுக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என்னை தாக்கும் எதிரிகளுக்கு மறைவாக, உம்முடைய இறக்கைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.
10அவர்கள் கொழுத்துப்போய், தங்களுடைய வாயினால் கர்வமாக பேசுகிறார்கள்.
11நாங்கள் செல்லும் பாதைகளில் இப்பொழுது எங்களை வளைந்துகொண்டார்கள்; எங்களைத் தரையிலே தள்ளும்படி அவர்கள் கண்கள் எங்களை பார்த்துக்கொண்டிருக்கின்றன.
12பீறுகிறதற்கு ஆவலுள்ள சிங்கத்திற்கும், மறைவிடங்களில் ஒளிந்திருக்கிற பாலசிங்கத்திற்கும் ஒப்பாக இருக்கிறார்கள்.
13யெகோவாவே, உம்முடைய பட்டயத்தினால் என்னுடைய ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு தப்புவியும்.
14யெகோவாவே, மனிதருடைய கைக்கும், இம்மையில் தங்களுடைய பங்கைப் பெற்றிருக்கிற இவ்வுலக மக்களின் கைக்கும் உம்முடைய கையினால் என்னைத் தப்புவியும்; அவர்கள் வயிற்றை உமது செழிப்பினால் நிரப்புகிறீர்; அவர்கள் குழந்தைச்செல்வத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு விட்டுச்செல்கிறார்கள்.

Read சங் 17சங் 17
Compare சங் 17:8-14சங் 17:8-14