14யெகோவாவே, மனிதருடைய கைக்கும், இம்மையில் தங்களுடைய பங்கைப் பெற்றிருக்கிற இவ்வுலக மக்களின் கைக்கும் உம்முடைய கையினால் என்னைத் தப்புவியும்; அவர்கள் வயிற்றை உமது செழிப்பினால் நிரப்புகிறீர்; அவர்கள் குழந்தைச்செல்வத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு விட்டுச்செல்கிறார்கள்.