12உமது ராஜ்ஜியத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள்.
13உம்முடைய ராஜ்ஜியம் எல்லாக் காலங்களிலுமுள்ள ராஜ்ஜியம், உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது.
14யெகோவா விழுகிற அனைவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட அனைவரையும் தூக்கிவிடுகிறார்.
15எல்லா உயிர்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு உணவுகொடுக்கிறீர்.
16நீர் உமது கையைத் திறந்து, எல்லா உயிர்களின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.
17யெகோவா தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது செயல்களிலெல்லாம் கிருபையுள்ளவருமாக இருக்கிறார்.
18தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும், உண்மையாகத் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும், யெகோவா அருகில் இருக்கிறார்.
19அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களைப் பாதுகாக்கிறார்.