5பெருமைக்காரர்கள் எனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாக வைக்கிறார்கள்; வழியோரத்திலே வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். (சேலா)
6நான் யெகோவாவை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்; யெகோவாவே, என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்திற்குச் செவிகொடும்.