Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - எண் - எண் 22

எண் 22:10-16

Help us?
Click on verse(s) to share them!
10பிலேயாம் தேவனை நோக்கி: “சிப்போரின் மகனாகிய பாலாக் என்னும் மோவாபின் ராஜா அவர்களை என்னிடத்திற்கு அனுப்பி:
11பூமியின் விசாலத்தை மூடுகிற ஒரு மக்கள்கூட்டம் எகிப்திலிருந்து வந்திருக்கிறது; ஆகையால், நீ வந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும்; அப்பொழுது நான் அவர்களோடு யுத்தம்செய்து, ஒருவேளை அவர்களைத் துரத்திவிடலாம் என்று சொல்லச்சொன்னான்” என்றான்.
12அதற்குத் தேவன் பிலேயாமை நோக்கி: “நீ அவர்களோடு போகவேண்டாம்; அந்த மக்களைச் சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றார்.
13பிலேயாம் காலையில் எழுந்து, பாலாகின் பிரபுக்களை நோக்கி: “நீங்கள் உங்களுடைய தேசத்திற்குப் போய்விடுங்கள்; நான் உங்களோடு வருவதற்குக் யெகோவா எனக்கு உத்திரவு கொடுக்கமாட்டோம் என்கிறார்” என்று சொன்னான்.
14அப்படியே மோவாபியர்களுடைய பிரபுக்கள் எழுந்து, பாலாகிடம் போய்: “பிலேயாம் எங்களோடு வரமாட்டேன் என்று சொன்னான்” என்றார்கள்.
15பாலாக் மறுபடியும் அவர்களிலும் கனவான்களான அதிக பிரபுக்களை அனுப்பினான்.
16அவர்கள் பிலேயாமிடத்தில் போய், அவனை நோக்கி: “சிப்போரின் மகனாகிய பாலாக் எங்களை அனுப்பி: நீர் என்னிடத்தில் வருவதற்குத் தடைபடவேண்டாம்;

Read எண் 22எண் 22
Compare எண் 22:10-16எண் 22:10-16