24அறியாமல் தவறி நடந்தாலும், சபையாருக்குத் தெரியாமல் யாதொரு தப்பிதம் செய்தாலும், சபையார் எல்லோரும் யெகோவாவுக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு காளையையும், கட்டளையின்படி அதற்கேற்ற உணவுபலியையும், பானபலியையும், பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
25அதினால் ஆசாரியன் இஸ்ரவேல் மக்களின் சபையனைத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்யவேண்டும்; அது அறியாமையினால் செய்யப்பட்டதாலும், அதற்காக அவர்கள் யெகோவாவுக்குத் தகனபலியையும் பாவநிவாரணபலியையும் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்ததினாலும், அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.
26அது அறியாமையினாலே மக்கள் யாவருக்கும் வந்தபடியால், அது இஸ்ரவேல் மக்களின் சபையனைத்திற்கும் அவர்களுக்குள்ளே தங்குகிற அந்நியனுக்கும் மன்னிக்கப்படும்.