9இரவிலே முகாமின்மேல் பனிபெய்யும்போது, மன்னாவும் அதின்மேல் விழும்.
10அந்தந்த வம்சங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்று அழுகிறதை மோசே கேட்டான்; யெகோவாவுக்கு மிகவும் கோபம் மூண்டது; மோசேயின் பார்வைக்கும் அது தீமையாக இருந்தது.
11அப்பொழுது மோசே யெகோவாவை நோக்கி: நீர் இந்த மக்கள் எல்லோருடைய பாரத்தையும் என்மேல் சுமத்தினதால், உமது அடியானுக்கு உபத்திரவம் வரச்செய்தது ஏன்? உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைக்காமல் போனது ஏன்?