Text copied!
Bibles in Tamil

1 இராஜா 22:43-47 in Tamil

Help us?

1 இராஜா 22:43-47 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

43 அவன் தன்னுடைய தகப்பனாகிய ஆசாவின் வழிகளிலெல்லாம் நடந்தான்; அவன் அதைவிட்டு விலகாமல் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் மேடைகள் இடிக்கப்படவில்லை; மக்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபம் காட்டிவந்தார்கள்.
44 யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவோடு சமாதானமாக இருந்தான்.
45 யோசபாத்தின் மற்ற செயல்பாடுகளும், அவன் காட்டிய வல்லமையும், அவன் செய்த யுத்தமும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
46 தன்னுடைய தகப்பனாகிய ஆசாவின் நாட்களில் மீதியாக விட்டிருந்த ஆண் விபசாரக்காரர்களையும் அவனுடைய தேசத்திலிருந்து அற்றுப்போகச்செய்தான்.
47 அப்பொழுது ஏதோமில் ராஜா இல்லை; பிரதிராஜா ஒருவன் இருந்தான்.
1 இராஜா 22 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்