Text copied!
Bibles in Tamil

லேவி 5:13-19 in Tamil

Help us?

லேவி 5:13-19 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 இந்தவிதமாக மேற்சொல்லிய காரியங்கள் ஒன்றில் அவன் செய்த பாவத்திற்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும், மீதியானது உணவுபலியைப்போல ஆசாரியனைச் சேரும் என்றார்.
14 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
15 “ஒருவன் யெகோவாவுக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றம்செய்து, அறியாமையினால் பாவத்திற்குட்பட்டால், அவன் தன் குற்றத்திற்காக பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் மதிப்புள்ள பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை குற்றநிவாரணபலியாகக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து,
16 பரிசுத்தமானதைக்குறித்துத் தான் செய்த குற்றத்தினால் உண்டான நஷ்டத்தைச் செலுத்தி, அத்துடன் ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டி, ஆசாரியனுக்குக் கொடுப்பானாக; குற்றநிவாரணபலியாகிய ஆட்டுக்கடாவினாலே அவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
17 “ஒருவன் செய்யத்தகாததென்று யெகோவாவுடைய கட்டளைகளினால் விலக்கப்பட்ட யாதொன்றைச் செய்து பாவத்திற்குட்பட்டால், அதை அவன் அறியாமையினால் செய்தாலும், அவன் குற்றமுள்ளவனாக இருந்து, தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
18 அதினால் அவன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்பிற்குச் சரியான பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் அறியாமல் செய்த குற்றத்தை ஆசாரியன் அவனுக்காக நிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
19 இது குற்றநிவாரணபலி; அவன் யெகோவாவுக்கு விரோதமாகக் குற்றம்செய்தான் என்பது நிச்சயம் என்றார்.
லேவி 5 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்