Text copied!
Bibles in Tamil

ரோமர் 10:11-21 in Tamil

Help us?

ரோமர் 10:11-21 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

11 அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவது இல்லை என்று வேதம் சொல்லுகிறது.
12 யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லோருக்கும் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற எல்லோரையும் அளவில்லாமல் ஆசீர்வதிக்கிறவராக இருக்கிறார்.
13 எனவே, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.
14 அவரை விசுவாசிக்காதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?
15 அனுப்பப்படவில்லை என்றால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைச் சொல்லி, நல்ல காரியங்களை நற்செய்தியாக அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.
16 ஆனாலும் நற்செய்திக்கு அவர்கள் எல்லோரும் கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான்.
17 எனவே, விசுவாசம் கேட்பதினாலே வரும், தேவனுடைய வசனத்தைக் கேட்பதினாலே விசுவாசம் வரும்.
18 இப்படியிருக்க, அவர்கள் கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன்; கேள்விப்பட்டார்கள்; அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூமியின் கடைசிவரைக்கும் செல்லுகிறதே.
19 இஸ்ரவேலர் அதை அறியவில்லையா என்று கேட்கிறேன், அறிந்தார்கள். முதலாவது மோசே: என் மக்களாக இல்லாதவர்களைக் கொண்டு நான் உங்களுக்கு எரிச்சல் உண்டாக்குவேன்; புத்தியீனமுள்ள மக்களாலே உங்களுக்குக் கோபமூட்டுவேன்” என்றான்.
20 அல்லாமலும் ஏசாயா: என்னைத் தேடாதவர்களாலே கண்டுபிடிக்கப்பட்டேன், என்னைக் கேட்காதவர்களுக்கு என்னை வெளிப்படுத்தினேன்” என்று தைரியத்தோடு சொல்லுகிறான்.
21 இஸ்ரவேலரைக்குறித்தோ: “கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களுமாக இருக்கிற மக்களிடம் நாள்முழுவதும் என் கரங்களை நீட்டினேன்” என்று அவன் சொல்லியிருக்கிறான்.
ரோமர் 10 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்