4 ஆசைவார்த்தைகளைப் பேசும் அந்நியப் பெண்ணாகிய ஒழுங்கீனமானவளுக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக,
5 ஞானத்தை நோக்கி, நீ என்னுடைய சகோதரி என்றும், புத்தியைப்பார்த்து, நீ என்னுடைய இனத்தைச் சேர்ந்தவள் என்றும் சொல்லு.
6 நான் என்னுடைய வீட்டின் ஜன்னல் அருகே நின்று, அதின் வழியாகப் பார்த்தபோது,
7 பேதையர்களாகிய வாலிபர்களுக்குள்ளே ஒரு புத்தியற்ற வாலிபனைக்கண்டு அவனை கவனித்தேன்.
8 அவன் மாலைமயங்கும் சூரியன் மறையும் நேரத்திலும், இரவின் இருளிலும்.
9 அவள் இருக்கும் தெருவிற்கு அடுத்த தெருவில் சென்று, அவளுடைய வீட்டுவழியாக நடந்துபோனான்.
10 அப்பொழுது இதோ, விபசாரியின் ஆடை ஆபரணம் தரித்த தந்திரமனமுள்ள ஒரு பெண் அவனுக்கு எதிர்ப்பட்டாள்.
11 அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; அவளுடைய கால்கள் வீட்டிலே தங்குகிறதில்லை.
12 சிலவேளை வெளியிலே இருப்பாள், சிலவேளை வீதியில் இருப்பாள், சந்துகள்தோறும் மறைந்திருப்பாள்.
13 அவள் அவனைப் பிடித்து முத்தமிட்டு, முகம் நாணாமல் அவனைப் பார்த்து:
14 சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது, இன்றைக்குத்தான் என்னுடைய பொருத்தனைகளை நிறைவேற்றினேன்.