20 பணப்பையைத் தன்னுடைய கையிலே கொண்டுபோனான், குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி,
21 தன்னுடைய மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன்னுடைய உதடுகளின் இனிமையான பேச்சால் அவனை இணங்கச்செய்தாள்.
22 உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலவும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டு தண்டனைக்குப் போவதுபோலவும்,
23 ஒரு குருவி தன்னுடைய உயிரை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழுவதற்கு விரைந்து போகிறதுபோலவும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவனுடைய இருதயத்தைப் பிளந்தது.
24 ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கவனியுங்கள்.
25 உன்னுடைய இருதயம் அவளுடைய வழியிலே சாயவேண்டாம்; அவளுடைய பாதையிலே மயங்கித் திரியாதே.