Text copied!
Bibles in Tamil

நீதி 28:19-28 in Tamil

Help us?

நீதி 28:19-28 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

19 தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவால் திருப்தியாவான்; வீணர்களைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான்.
20 உண்மையுள்ள மனிதன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; செல்வந்தனாகிறதற்கு அவசரப்படுகிறவனோ ஆக்கினைக்குத் தப்பமாட்டான்.
21 பாரபட்சம் நல்லதல்ல, பாரபட்சமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்திற்காக அநியாயம் செய்வான்.
22 பொறாமைக்காரன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான், வறுமை தனக்கு வருமென்று அறியாமல் இருக்கிறான்.
23 தன்னுடைய நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைவிட, கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.
24 தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் கொள்ளையிட்டு, அது துரோகமல்ல என்பவன் பாழாக்குகிற மனிதனுக்குத் தோழன்.
25 பெருநெஞ்சன் வழக்கை உண்டாக்குகிறான்; யெகோவாவை நம்புகிறவனோ செழிப்பான்.
26 தன்னுடைய இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாக நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.
27 தரித்திரர்களுக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையமாட்டான்; தன்னுடைய கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்.
28 துன்மார்க்கர்கள் எழும்பும்போது மனிதர்கள் மறைந்துகொள்கிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.
நீதி 28 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்