Text copied!
Bibles in Tamil

நீதி 25:7-18 in Tamil

Help us?

நீதி 25:7-18 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 உன் கண்கள் கண்ட பிரபுவின் சமுகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல; அவன் உன்னைப் பார்த்து: மேலே வா என்று சொல்வதே உனக்கு மேன்மை.
8 வழக்காடப் வேகமாகமாகப் போகாதே; முடிவிலே உன்னுடைய அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே.
9 நீ உன்னுடைய அயலானுடனேமட்டும் உன்னுடைய வழக்கைக்குறித்து வழக்காடு, மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே.
10 மற்றப்படி அதைக் கேட்கிறவன் உன்னை நிந்திப்பான்; உன்னுடைய அவமானம் உன்னைவிட்டு நீங்காது.
11 ஏற்ற நேரத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமம்.
12 கேட்கிற காதுக்கு, ஞானமாகக் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொற்கடுக்கனுக்கும் தங்க மோதிரத்திற்கும் சமம்.
13 அறுவடைக்காலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, அப்படியே உண்மையான தூதுவனும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; அவன் தன்னுடைய எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரச்செய்வான்.
14 கொடுப்பேன் என்று சொல்லியும் கொடுக்காமல் இருக்கிற வஞ்சகன் மழையில்லாத மேகங்களுக்கும் காற்றுக்கும் சமம்.
15 நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கச்செய்யலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்.
16 தேனைக் கண்டுபிடித்தால் அளவாகச் சாப்பிடு; அதிகமாக சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய்.
17 உன்னுடைய அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடி, அடிக்கடி அவனுடைய வீட்டில் கால்வைக்காதே.
18 பிறனுக்கு விரோதமாகப் பொய்சாட்சி சொல்லுகிற மனிதன் தண்டாயுதத்திற்கும் வாளிற்கும் கூர்மையான அம்பிற்கும் ஒப்பானவன்.
நீதி 25 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்