Text copied!
Bibles in Tamil

சங் 97:3-12 in Tamil

Help us?

சங் 97:3-12 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 நெருப்பு அவருக்கு முன்சென்று, சுற்றிலும் இருக்கிற அவருடைய எதிரிகளைச் சுட்டெரிக்கிறது.
4 அவருடைய மின்னல்கள் பூமியைப் பிரகாசிப்பித்தது; பூமி அதைக்கண்டு அதிர்ந்தது.
5 யெகோவாவின் பிரசன்னத்தினால் மலைகள் மெழுகுபோல உருகினது, சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போனது.
6 வானங்கள் அவருடைய நீதியை வெளிப்படுத்துகிறது; எல்லா மக்களும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள்.
7 சிலைகளை வணங்கி, விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற அனைவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக; தெய்வங்களே, நீங்களெல்லோரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
8 சீயோன் கேட்டு மகிழ்ந்தது; யெகோவாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளினால் யூதாவின் மகள்கள் சந்தோஷப்பட்டார்கள்.
9 யெகோவாவே, பூமி அனைத்திற்கும் நீர் உன்னதமான தேவன்; எல்லா தெய்வங்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்.
10 யெகோவாவில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.
11 நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயமுள்ளவர்களுக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது.
12 நீதிமான்களே, யெகோவாவுக்குள் மகிழ்ந்து, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.
சங் 97 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்