14 யெகோவா தம்முடைய மக்களைத் தள்ளிவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்.
15 நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்; செம்மையான இருதயத்தார்கள் அனைவரும் அதைப் பின்பற்றுவார்கள்.
16 துன்மார்க்கர்களுக்கு விரோதமாக எனது சார்பாக எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரர்களுக்கு விரோதமாக எனது சார்பாக நிற்பவன் யார்?
17 யெகோவா எனக்குத் துணையாக இல்லாவிட்டால், என்னுடைய ஆத்துமா சீக்கிரமாக மவுனத்தில் தங்கியிருக்கும்.
18 என்னுடைய கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, யெகோவாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.