Text copied!
Bibles in Tamil

சங் 88:3-12 in Tamil

Help us?

சங் 88:3-12 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 என்னுடைய ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என்னுடைய உயிர் பாதாளத்திற்கு அருகில் வந்திருக்கிறது.
4 நான் குழியில் இறங்குகிறவர்களோடு நினைக்கப்பட்டு, பெலனற்ற மனிதனைப்போல ஆனேன்.
5 மரித்தவர்களில் ஒருவனைப்போல் தள்ளப்பட்டிருக்கிறேன்; நீர் இனி ஒருபோதும் நினையாதபடி, உமது கையால் அறுக்கப்பட்டுபோய்க் கல்லறைகளிலே கிடக்கிறவர்களைப்போலானேன்.
6 என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர்.
7 உம்முடைய கோபம் என்னை அமிழ்த்துகிறது; உம்முடைய அலைகள் எல்லாவற்றினாலும் என்னை வருத்தப்படுத்துகிறீர். (சேலா)
8 எனக்கு அறிமுகமானவர்களை எனக்குத் தூரமாக விலக்கி, அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினீர்; நான் வெளியேற முடியாதபடி அடைபட்டிருக்கிறேன்.
9 துக்கத்தினால் என்னுடைய கண் தொய்ந்துபோனது; யெகோவாவே, அநுதினமும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டு, உமக்கு நேராக என்னுடைய கைகளை விரிக்கிறேன்.
10 இறந்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ? செத்துப்போன வீரர்கள் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? (சேலா)
11 கல்லறைக்குழியில் உமது கிருபையும், அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ?
12 இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது நீதியும் அறியப்படுமோ?
சங் 88 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்