7 அவர்களுடைய கண்கள் கொழுப்பினால் எடுப்பாகப் பார்க்கிறது; அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாக நடக்கிறது.
8 அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாகக் கொடுமை பேசுகிறார்கள்; பெருமையாகப் பேசுகிறார்கள்.
9 தங்களுடைய வாய் வானம்வரை எட்டப் பேசுகிறார்கள்; அவர்களுடைய நாவு பூமியெங்கும் உலாவுகிறது.
10 ஆகையால் அவருடைய மக்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்; தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாகச் சுரந்துவரும்.
11 தேவனுக்கு அது எப்படித் தெரியும்? உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ? என்று சொல்லுகிறார்கள்.
12 இதோ, இவர்கள் துன்மார்க்கர்கள்; இவர்கள் என்றும் சுகமாக வாழ்கிறவர்களாயிருந்து, சொத்தைப் பெருகச்செய்கிறார்கள்.