19 தேவனே நீர் என்னுடைய நிந்தையையும் என்னுடைய வெட்கத்தையும் என்னுடைய அவமானத்தையும் அறிந்திருக்கிறீர்; என்னுடைய எதிரிகள் எல்லோரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள்.
20 நிந்தை என்னுடைய இருதயத்தைப் பிளந்தது; நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், ஒருவனும் இல்லை.
21 என்னுடைய ஆகாரத்தில் கசப்பு கலந்து கொடுத்தார்கள், என்னுடைய தாகத்திற்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள்.
22 அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும், அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாக இருக்கட்டும்.
23 அவர்களுடைய கண்கள் காணாதபடி இருளாகட்டும்; அவர்கள் இடுப்புகளை எப்போதும் தள்ளாடச்செய்யும்.
24 உம்முடைய கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றும்; உம்முடைய கோபாக்கினி அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக.
25 அவர்கள் குடியிருப்பு பாழாகட்டும்; அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக.