Text copied!
Bibles in Tamil

சங் 34:7-18 in Tamil

Help us?

சங் 34:7-18 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 யெகோவாவுடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சுற்றி முகாமிட்டு அவர்களை விடுவிக்கிறார்.
8 யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாக இருக்கிற மனிதன் பாக்கியவான்.
9 யெகோவாவுடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.
10 சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாக இருக்கும்; யெகோவாவை தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறையாது.
11 பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; யெகோவாவுக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.
12 நன்மையைக் காணும்படி, வாழ்க்கையை விரும்பி, நீடித்த நாட்களை நேசிக்கிற மனிதன் யார்?
13 உன் நாவை தீங்கிற்கும், உன்னுடைய உதடுகளை பொய் வார்த்தைகளுக்கும் விலக்கிக் காத்துக்கொள்.
14 தீமையை விட்டு விலகி, நன்மை செய்; சமாதானத்தைத் தேடி, அதைத் பின்தொடர்ந்துகொள்.
15 யெகோவாவுடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாக இருக்கிறது; அவருடைய காதுகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.
16 தீமைசெய்கிறவர்களுடைய பெயரைப் பூமியில் இல்லாமல் போகச்செய்ய, யெகோவாவுடைய முகம் அவர்களுக்கு விரோதமாக இருக்கிறது.
17 நீதிமான்கள் கூப்பிடும்போது யெகோவா கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.
18 உடைந்த இருதயமுள்ளவர்களுக்குக் யெகோவா அருகில் இருந்து, நொறுக்கப்பட்ட ஆவியுள்ளவர்களை காப்பாற்றுகிறார்.
சங் 34 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்