Text copied!
Bibles in Tamil

சங் 33:7-12 in Tamil

Help us?

சங் 33:7-12 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 அவர் கடலின் தண்ணீர்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான தண்ணீர்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார்.
8 பூமியெல்லாம் யெகோவாவுக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிமக்களெல்லாம் அவருக்கு பயந்திருப்பதாக.
9 அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.
10 யெகோவா தேசங்களின் ஆலோசனையை வீணடித்து, மக்களுடைய நினைவுகளை பயனற்றதாக ஆக்குகிறார்.
11 யெகோவாவுடைய ஆலோசனை நிரந்தரகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.
12 யெகோவாவை தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட தேசமும், அவர் தமக்குச் சொந்தமாகத் தெரிந்துகொண்ட மக்களும் பாக்கியமுள்ளது.
சங் 33 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்