Text copied!
Bibles in Tamil

சங் 31:12-17 in Tamil

Help us?

சங் 31:12-17 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 செத்தவனைப்போல எல்லோராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப்போல ஆனேன்.
13 அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்; எனக்கு விரோதமாக அவர்கள் ஒன்றாக ஆலோசனை செய்கிறதினால் திகில் என்னைச் சூழ்ந்துகொண்டது; என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறார்கள்.
14 நானோ, யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன் என்று சொன்னேன்.
15 என்னுடைய காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என் எதிரிகளின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும்.
16 நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கச்செய்து, உமது கிருபையினாலே என்னை இரட்சியும்.
17 யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; துன்மார்க்கர்கள் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாக இருக்கட்டும்.
சங் 31 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்