Text copied!
Bibles in Tamil

சங் 22:20-24 in Tamil

Help us?

சங் 22:20-24 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 என்னுடைய ஆத்துமாவை வாளிற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் கொடூரத்திற்கும் தப்புவியும்.
21 என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து காப்பாற்றும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது என்னைக் காப்பாற்றும்.
22 உம்முடைய பெயரை என் சகோதரர்களுக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.
23 யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லோரும் அவருக்கு மரியாதைசெய்யுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லோரும் அவர்மேல் பயபக்தியாக இருங்கள்.
24 உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாக நினைக்காமலும், அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடும்போது அவனைக் கேட்டருளினார்.
சங் 22 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்