Text copied!
Bibles in Tamil

சங் 139:17-22 in Tamil

Help us?

சங் 139:17-22 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

17 தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் அளவு எவ்வளவு அதிகம்.
18 அவைகளை நான் எண்ணப்போனால், மணலைவிட அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மருகில் இருக்கிறேன்.
19 தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாக இருக்கும்; இரத்தப்பிரியர்களே, நீங்கள் என்னை விட்டு அகன்றுபோங்கள்.
20 அவர்கள் உம்மைக் குறித்துத் துன்மார்க்கமாகப் பேசுகிறார்கள்; உம்முடைய எதிரிகள் உமது பெயரை வீணாக வழங்குகிறார்கள்.
21 யெகோவாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகைக்காமலும், உமக்கு விரோதமாக எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ?
22 முழுப்பகையாக அவர்களைப் பகைக்கிறேன்; அவர்களை எனக்குப் பகைவர்களாக நினைக்கிறேன்.
சங் 139 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்