Text copied!
Bibles in Tamil

சங் 135:13-18 in Tamil

Help us?

சங் 135:13-18 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 யெகோவாவே, உம்முடைய பெயர் என்றைக்குமுள்ளது; யெகோவாவே, உம்முடைய புகழ் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.
14 யெகோவா தம்முடைய மக்களின் நியாயத்தை விசாரித்து, தம்முடைய ஊழியக்காரர்கள்மேல் பரிதாபப்படுவார்.
15 அஞ்ஞானிகளுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும், மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது.
16 அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
17 அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை.
18 அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும், அவைகளைப்போல் இருக்கிறார்கள்.
சங் 135 in இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்