Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - 1 இராஜா - 1 இராஜா 20

1 இராஜா 20:6-13

Help us?
Click on verse(s) to share them!
6ஆனாலும் நாளை இந்த நேரத்தில் என்னுடைய வேலைக்காரர்களை உன்னிடம் அனுப்புவேன்; அவர்கள் உன்னுடைய வீட்டையும் உன்னுடைய வேலைக்காரர்களின் வீடுகளையும் சோதித்து, உன்னுடைய கண்ணுக்குப் பிரியமானவைகள் எல்லாவற்றையும் தங்களுடைய கைகளில் எடுத்துக்கொண்டு போவார்கள் என்றார் என்று சொன்னார்கள்.
7அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, தேசத்தின் மூப்பர்களையெல்லாம் அழைத்து: இவன் ஆபத்தைத் தேடுகிற விதத்தைக் கவனித்துப் பாருங்கள்; என்னுடைய பெண்களையும், என்னுடைய மகன்களையும், என்னுடைய வெள்ளியையும், என்னுடைய பொன்னையும் கேட்க, இவன் என்னிடம் ஆள் அனுப்பினபோது, நான் கொடுக்கமாட்டேன் என்று இவனுக்கு மறுக்கவில்லையே என்றான்.
8அப்பொழுது எல்லா மூப்பர்களும் எல்லா மக்களும் அவனைப் பார்த்து: நீர் அவனுடைய வார்த்தைகளைக் கேட்கவும், அவனுக்குச் சம்மதிக்கவும் வேண்டாம் என்றார்கள்.
9அதினால் அவன் பெனாதாத்தின் தூதுவர்களை நோக்கி: நீங்கள் ராஜாவாகிய என்னுடைய எஜமானுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், நீர் முதல்முறை உமது அடியானுக்குச் சொல்லியனுப்பின யாவும் செய்வேன்; இந்தக் காரியத்தையோ நான் செய்யக்கூடாது என்று சொல்லுங்கள் என்றான்; தூதுவர்கள் போய், இந்த மறுமொழியை அவனுக்குச் சொன்னார்கள்.
10அப்பொழுது பெனாதாத் அவனிடம் ஆள் அனுப்பி: எனக்குப் பின்னே செல்லுகிற மக்கள் எல்லோரும் கைக்கு ஒரு பிடியாவது வாரிக்கொள்ள சமாரியாவின் தூள் போதுமானதாக இருந்தால், தெய்வங்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னான்.
11அதற்கு இஸ்ரவேலின் ராஜா மறுமொழியாக; ஆயுதம் அணிந்திருக்கிறவன், ஆயுதம் பிடுங்கிப் போடுகிறவனைப்போலப் பெருமைபாராட்டக்கூடாது என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றான்.
12பெனாதாத்தும், மற்ற ராஜாக்களும் கூடாரங்களிலே குடித்துக்கொண்டிருக்கும்போது, இந்த வார்த்தையைக் கேட்டு, தன்னுடைய ஆட்களை நோக்கி: யுத்தம் செய்ய ஆயத்தம்செய்யுங்கள் என்றான்; அப்படியே நகரத்தின்மேல் யுத்தம்செய்ய ஆயத்தம்செய்தார்கள்.
13அப்பொழுது ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடம் வந்து: அந்த ஏராளமான மக்கள்கூட்டத்தையெல்லாம் கண்டாயா? இதோ, நானே யெகோவா என்று நீ அறியும்படி இன்றைக்கு அதை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.

Read 1 இராஜா 201 இராஜா 20
Compare 1 இராஜா 20:6-131 இராஜா 20:6-13