Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - லேவி - லேவி 27

லேவி 27:15-26

Help us?
Click on verse(s) to share them!
15தன் வீட்டைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், நீ மதிக்கும் பொருளுடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுடையதாகும்.
16“ஒருவன் தனக்குச் சொந்தமான வயலில் யாதொரு பங்கைக் யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், உன் மதிப்பு அதின் விதைப்புக்குத்தக்கதாக இருக்கவேண்டும்; ஒரு கலம் வாற்கோதுமை விதைக்கிற வயல் ஐம்பது வெள்ளிச் சேக்கலாக மதிக்கப்படவேண்டும்.
17யூபிலி வருடம்முதல் அவன் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், அது உன் மதிப்பின்படி இருக்கவேண்டும்.
18யூபிலி வருடத்திற்குப்பின் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டானானால், யூபிலி வருடம்வரையுள்ள மற்ற வருடங்களின்படியே ஆசாரியன் பொருட்களைக் கணக்குப்பார்த்து, அதற்குத் தக்கதை உன் மதிப்பீட்டில் தள்ளுபடி செய்யவேண்டும்.
19வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், உன் மதிப்பான பொருட்களுடன் ஐந்தில் ஒரு பங்கை சேர்த்துக்கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு உறுதியாகும்.
20அவன் வயலை மீட்டுக்கொள்ளாமல், வயலை வேறொருவனுக்கு விற்றுப்போட்டால், அது திரும்ப மீட்கப்படாமல்,
21யூபிலி வருடத்தில் மீட்கப்படும்போது, சாபத்தீடான வயலாகக் யெகோவாவுக்கென்று நியமிக்கப்பட்டதாக இருப்பதாக; அது ஆசாரியனுக்குச் சொந்தமான நிலமாகும்.
22ஒருவன் தனக்குச் சொந்தமான வயலாக இல்லாமல், தான் விலைக்கு வாங்கின ஒரு வயலைக் யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால்,
23அது யூபிலி வருடம்வரை, உன் மதிப்பின்படி பெறும்விலை இன்னதென்று ஆசாரியன் அவனோடே கணக்குப்பார்த்து, அந்த உன் மதிப்பை, யெகோவாவுக்குப் பரிசுத்தமாக இருக்கும்படி, அவன் அந்நாளிலே கொடுக்கக்கடவன்.
24யார் கையிலே அந்த வயலை வாங்கினானோ, அந்த நிலத்திற்குச் சொந்தக்காரனிடம் அது யூபிலி வருடத்தில் திரும்பச்சேரும்.
25உன் மதிப்பீடெல்லாம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்காயிருக்கக்கடவது; ஒரு சேக்கலானது இருபது கேரா.
26“முதற்பிறந்தவைகள் யெகோவாவுடையது, ஆகையால் ஒருவரும் முதற்பிறந்தவைகளாகிய மிருகங்களைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொள்ளக்கூடாது; அது மாடானாலும் ஆடானாலும் யெகோவாவுடையது.

Read லேவி 27லேவி 27
Compare லேவி 27:15-26லேவி 27:15-26