Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - சங் - சங் 40

சங் 40:1-5

Help us?
Click on verse(s) to share them!
1இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல். யெகோவாவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாகச் சாய்ந்து, என்னுடைய கூப்பிடுதலைக் கேட்டார்.
2பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என்னுடைய கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என்னுடைய கால் அடிகளை உறுதிப்படுத்தி,
3நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, யெகோவாவை நம்புவார்கள்.
4பெருமைக்காரர்களையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் பார்க்காமல், யெகோவாவையே தன்னுடைய நம்பிக்கையாக வைக்கிற மனிதன் பாக்கியவான்.
5என் தேவனாகிய யெகோவாவே, நீர் எங்களுக்காக செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாக இருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லி முடியாது. நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்.

Read சங் 40சங் 40
Compare சங் 40:1-5சங் 40:1-5