7உயரத்திலிருந்து உமது கரத்தை நீட்டி, பெருவெள்ளத்திற்கு என்னை விலக்கி இரட்சியும்.
8மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நியர்களின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்.
9யெகோவாவே, நான் உமக்குப் புதுப்பாட்டைப் பாடுவேன்; தம்புரினாலும் பத்து நரம்பு வீணையினாலும் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
10நீரே ராஜாக்களுக்கு ஜெயத்தைத் தந்து, ஊழியனாகிய தாவீதைப் பொல்லாத வாளுக்குத் தப்புவிக்கிறவர்.