Text copied!
CopyCompare
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் - அப் - அப் 27

அப் 27:1-14

Help us?
Click on verse(s) to share them!
1நாங்கள் இத்தாலியா தேசத்திற்குக் கப்பல் ஏறிப்போகும்படி தீர்மானிக்கப்பட்டபோது, பவுலையும் காவலில் வைக்கப்பட்டிருந்த வேறுசிலரையும் அகுஸ்து படையைச் சேர்ந்த யூலியு என்னும் பெயர்கொண்ட நூறுபேருக்கு தலைவனிடத்தில் ஒப்புவித்தார்கள்.
2அதிரமித்தியம் ஊர்க்கப்பலில் நாங்கள் ஏறி, ஆசியா நாட்டு வழியைபிடித்துப் போகவேண்டுமென்று நினைத்துப் புறப்பட்டோம். மக்கெதோனியா தேசத்துத் தெசலோனிக்கே பட்டணத்தானாகிய அரிஸ்தர்க்கு எங்களுடனேகூட இருந்தான்.
3மறுநாள் சீதோன் துறைமுகம் வந்துசேர்ந்தோம். யூலியு பவுலை அன்பாக நடப்பித்து, அவன் தன் நண்பர்களிடத்திலே போய் உபசரிக்கப்படும்படிக்கு உத்தரவு கொடுத்தான்.
4அந்த இடத்தைவிட்டு நாங்கள் புறப்பட்டு, எதிர்க்காற்றாயிருந்தபடியினால், சீப்புரு தீவின் ஓரமாகப் பயணம் செய்தோம்
5பின்பு சிலிசியா பம்பிலியா நாடுகளின் கடல்வழியாக பயணித்து, லீசியா நாட்டு மீறாப்பட்டணத்தில் சேர்ந்தோம்.
6இத்தாலியாவிற்குப் போகிற அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலை, நூறுபேருக்கு தலைவன் அங்கே பார்த்து, எங்களை அதில் ஏற்றினான்.
7காற்று எங்களைத் தடுத்தபடியினாலே, நாங்கள் அநேகநாட்கள் மெதுவாய்ச் சென்று, வருத்தத்தோடு கினீது பட்டணத்திற்கு எதிரே வந்து, சல்மோனே ஊருக்கு எதிராய்க் கிரேத்தாதீவின் ஓரமாகப் பயணம் செய்தோம்.
8அதை வருத்தத்தோடு கடந்து, நல்ல துறைமுகம் என்னப்பட்ட ஒரு இடத்திற்கு வந்தோம்; லசேயபட்டணம் அதற்கு அருகில் இருந்தது.
9வெகுகாலம் சென்று, உபவாசநாளும் முடிந்து போனபடியினாலே, இனிக் கப்பல் பயணம் செய்கிறது ஆபத்தாக இருக்குமென்று, பவுல் அவர்களை நோக்கி:
10மனிதர்களே, இந்த பயணத்தினாலே பொருட்களுக்கும், கப்பலுக்கும் மாத்திரமல்ல, நம்முடைய உயிருக்கும் வருத்தமும், மிகுந்த சேதமும் உண்டாயிருக்குமென்று காண்கிறேன் என்று சொல்லி அவர்களை எச்சரித்தான்.
11நூறுபேருக்குத் தலைவன் பவுலினால் சொல்லப்பட்டவைகளைவிட மாலுமியையும் கப்பல் சொந்தக்காரர்களையும் அதிகமாக நம்பினான்.
12அந்தத் துறைமுகம் மழைகாலத்திலே தங்குவதற்கு வசதியாக இல்லாததினால், அந்த இடத்தைவிட்டுத் தென்மேற்கையும் வடமேற்கையும் நோக்கியிருக்கும் கிரேத்தா தீவிலுள்ள துறைமுகமாகிய பேனிக்ஸ் என்னும் இடத்தில் சேரக்கூடுமானால் சேர்ந்து, மழைகாலத்தில் தங்கும்படி அநேகம்பேர் ஆலோசனை சொன்னார்கள்.
13தென்றல் மெதுவாக வீசினபடியால், தாங்கள் வேண்டிக்கொண்டது கைகூடிவந்ததென்று எண்ணி, அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு கிரேத்தா தீவிற்கு அருகில் சென்றார்கள்.
14கொஞ்சநேரத்திற்குள்ளே யூரோக்கிலிதோன் என்னும் கடுங்காற்று அதில் மோதிற்று.

Read அப் 27அப் 27
Compare அப் 27:1-14அப் 27:1-14